Header Ads

Breaking News
recent

திருமலையில் 60 ஆக அதிகரித்த கொவிட் மரணம்.......



திருகோணமலை மாவட்டத்தில் 60 ஆகியது கொவிட் மரணம் இதுவரை மாவட்டத்தில் 2695 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதிலும் நடப்பு மாதத்தில் 1254 22.05.2021 காலை 10 மணி தொடக்கம் 23.05.2021 காலை 10 மணி வரையான திருகோணமலையின் Covid 19 நிலவரம் பற்றிய தகவல்களை திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் வெளியிடப்பட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில் கிண்ணியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகிய 3 மரணங்களோடு உப்புவெளி 2 , குறிஞ்சாக்கேணி 1 ஆகிய மரணப்பதிவுகளோடு மாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது .


அதேவேளை 64 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டிருக்கிறார்கள் . அதிகபடியாக மூதூர் மருத்துவ சுகாதார அதிகாரி பிரிவில் 22 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டிருக்கிறார்கள் .
Powered by Blogger.