Header Ads

Breaking News
recent

94000 இற்கும் அதிகமானோருக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி



நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 94000 இற்கும் அதிகமானோருக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய நாளில் மாத்திரம் 8783 பேருக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 94,436 பேருக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் Covishield கொரோனா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி குறித்த காலப்பகுதியில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.