Header Ads

Breaking News
recent

கிராமப்புற வைத்தியசாலைகளுக்கு கட்டில்கள் வழங்கி வைப்பு...

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வைத்தியசாலைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பொறியியலாளர் பிரிவினால் கட்டில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்டத்தில் வசதிகள் குறைந்த பிரதேச வைத்தியசலைகளுக்கு இக்கட்டிகள் வழங்கிவக்கப்பட்டது.

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை, தம்பலகாமம், நிலாவெளி,சம்பூர், தோப்பூர்,சேறுநுவர மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலைகளுக்கு கட்டிகள், மெத்தைகள், தலையணை உறை மற்றும் பெப்சிட் போன்ற உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறியியலாளர் பிரிவின் திருகோணமலை மாவட்ட செயலாளர் மகேஷ் சதுரங்கவினால் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் இயங்க குணசேகரவிடம் இப்பொருட்கள் கையளிக்கப்பட்டது.



Powered by Blogger.