பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு கப்பலில் வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(அப்துல்சலாம் யாசீம்)
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கப்பலில் வருகை தந்த 61 வயதுடைய நபர் தவறி விழுந்த நிலையில் 1990 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக அழைத்து வரப்பட்டதாகவும், இவருக்கு முதுகெலும்பு உடைந்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்று (20) அதிகாலை இவருக்கு பெறப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த EFRENL AGVAYANI (61வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவை பிரிவில் தனி அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.