Header Ads

Breaking News
recent

கஞ்சா விற்பனையாளர் திருமலையில் கைது!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கஞ்சா போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (11) இடம்பெற்றுள்ளது.

கோமரங்கடவல மற்றும் மொரவெவ பிரதேசத்தில் தமது பாடசாலை சிறார்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பிரத்தியேக வகுப்பிற்கு அழைத்துச் செல்வதைப் போன்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர் கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்யும் பொழுது குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நொச்சிகுளம்- ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் ஜவாஹீர் என்றழக்கப்படும் றிழ்வான் (39வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவர் தொடர்பில் ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.
Powered by Blogger.