அதிரடிப்படையின் விசேட குழு சேவையில்..!

இலஞ்ச ஊழல் குற்றச்செயற்பாடுகளில் ஈடுப்படும் நபர்களை கைது செய்வதற்காக அதிரடிப்படையின் விசேட குழுவொன்று நியமிக்கபட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் இலஞ்ச ஊழல் குற்றச்செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
118 என்ற அவசர இலக்கத்திற்கு ஊடாக கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த குழு விசேட சுற்றிவலைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கைக முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலஞ்ச ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 118 என்ற அவசர இலக்கத்திற்கு ஊடாக செய்ய முடியுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.