Header Ads

Breaking News
recent

முன்னிலையை உறுதிப்படுத்தும் திமுக கூட்டணி



தேர்தல் ஆணையத் தகவல்களின்படி திமுக கூட்டணி தமது முன்னிலை நிலவரத்தை உறுதிப்படுத்தி வருகிறது.

231 தொகுதிகளுக்கான முன்நிலை நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் வெற்றிக்குத் தேவையான 118 இடங்களை திமுக மட்டுமே பெற்றுள்ளது.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை திமுக என்பது உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் அதிமுக 79 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கணக்குகளைப் பார்த்தால், 137 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

93 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மையம் ஓர் இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
Powered by Blogger.