Header Ads

Breaking News
recent

ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபை அமர்வுகளில் பங்கேற்க முடியும் : சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன...



இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள ரிஷாட் பதியுதீன் மற்றும் சிறைச்சாலையில் உள்ள பிரேமலால் ஜயசேகர ஆகியோரை சபை அமர்வுகளுக்கு அழைக்க சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் விரும்பினால் சபை அமர்வுகளில் பங்கேற்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் வரப்பிரசாதங்களின் கீழ் சபாநாயகரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய செயற்பட்டு கோரிக்கை முன்வைக்கப்படுமாயின் மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு நாடாளுமன்ற படைக்கள சேவிதரால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரேமலால் ஜயசேகர விரும்பினால் அவரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற படைக்கள சேவிதரால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைய கொவிட்19 பரவல் காரணமாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மாத்திரம் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட வேண்டும் என படைக்கள சேவிதரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.