Header Ads

Breaking News
recent

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவ நிகழ்வு!!!


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவ நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வாக இருக்கின்ற தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு தற்பொழுது முல்லைத்தீவு தீர்த்தக்கரை புனித தீர்த்த தலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கு எடுக்கப்படுகின்ற தீர்த்தம் ஆனது முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இத்தீர்த்தத்தில் அதாவது உப்புநீரில் விளக்கு ஏற்றி வழிபடுகின்ற நிகழ்வு இன்று இடம்பெற இருக்கின்றது. உப்பு நீரில் எரியும் விளக்கானது வருகின்ற ஏழு நாட்களும் தொடர்ந்து சுடர்விட்டு எரிகின்ற அதிசய நிகழ்வு வருடாவருடம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் தீர்த்தம் எடுக்கின்ற நிகழ்வானது ஏராளமான போலீசார் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்போடு சுகாதார துறையினரின் வழிகாட்டுதலோடு குறிப்பிட்ட அடியார்களோடு சுகாதார வழிமுறைகளுக்கு அமைப்பாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. Max தமிழ் செய்திகளுக்காக முல்லைத்தீவு தீர்தகரையில் இருந்து tst Thuyavan








Powered by Blogger.