Header Ads

Breaking News
recent

திருமலையில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை!


கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, திருகோணமலை சுகாதாரப் பிராந்தியத்தில் 12 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 230 கிராம சேவகர் பிரிவுகள் இருக்கின்றன.

இதில் 3வது கொரோனா அலையினால் பாதிக்கப்பட்டு, உயர் ஆபத்தான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 153 கிராம சேவகர் பிரிவுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இதன்படி கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, திருகோணமலை, மூதூர் மற்றும் உப்புவெளி ஆகிய சுகாதாரப் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இந்தப் பிரிவில் 30 க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட 29486 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காக 229 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.