கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இளைஞரொருவர் கைது...

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-எத்தாபெந்திவெவ காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-எத்தாபெந்திவெவ -பனிக்கிட்டியாவ பகுதியில் வயலுக்குச் செல்வதை போன்று சென்று அக் காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக மொரவெவ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதீப் குமாரவிற்கு கிடைக்கப்பற்ற இரகசியத் தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து சோதனையிட்ட போது கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் கசிப்பு பெரல் போன்றவற்றுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கிஷாந்த மதுரசிங்க (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.