Header Ads

Breaking News
recent

இந்தியாவில் இருந்து தப்பி வந்த குடும்பமொன்று கண்டுபிடிப்பு - வென்னப்புவயில் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்



இந்தியாவில் இருந்து இந்நாட்டிற்கு மீன்பிடிப் படகொன்றில் வந்து புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரின் இரண்டு குழந்தைகளுடன் சுகாதார பிரிவினரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணுடன் இந்தியாவில் இருந்து வந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

இந்தியாவின் சென்னை குப்பம் பகுதியில் இருந்து குறித்த பெண் மீன்பிடிப் படகு மூலம் நேற்று (30) அதிகாலை வந்து புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்துள்ளார்.

14 மற்றும் 4 வயதுடைய அவருடைய குழந்தைகளுடன் அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவின் அதிகாரிகள் புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் அவர் பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
Powered by Blogger.