Header Ads

Breaking News
recent

கரைவலை வீசுவதற்கு சென்ற இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - இறக்ககண்டி பகுதியில் கரைவலை வீசுவதற்கு சென்ற இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (24)மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை -இறக்ககண்டி பகுதியைச் சேர்ந்த சப்ரி சிபான் (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- படகில் கரைவலை வீசுவதற்காக சென்றபோது குளிப்பதற்காக படகில் இருந்து பாய்ந்த வேளை அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Powered by Blogger.