Header Ads

Breaking News
recent

மறைந்த கே.ஏ.பாயிஸின் மரணத்தில் மர்மம் - மூவர் கைது!!!


புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸின் மரணம் தொடர்பில் அவரது சாரதி மற்றும் கெப் ரக வாகனத்தில் பயணித்த இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரிய வந்துள்ளது.

நகர சபை தலைவர் சிலருடன் ரால்மடம குளத்தில் குளித்துவிட்டு வாகனத்தில் பின்னர் அமர்ந்து சென்ற சந்தர்ப்பத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசபட்டோ அல்லது வேறு முறையிலோ விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை 5.30 மணிக்கும் 6.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணம் தொடர்பில் பொலிஸார் பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Powered by Blogger.