முகக்கவசம் அணியாத ஜனாதிபதிக்கு 100 டொலர் அபராதம்...

முகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 100 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் முகக்கவசம் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார்.
இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம், கொரோனா தடுப்பு விதிமுறைகளைமீறி முகக்கவசம் அணியாமல் அதிக அளவில் ஆட்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டதாகக் கூறி ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 100 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது