மீன் வியாபாரியிடம் இலஞ்சம் : பொலிஸ் உத்தியோகத்தரின் செயல்...

பயணக் கட்டுப்பாடு காலப்பகுதியில், அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்ற சம்பவமொன்று, யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பயணக் கட்டுப்பாடு தற்போது அமுலில் உள்ள நிலையில், நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரித்தில் ஈடுபட்ட மீன் வியாபாரி ஒருவரை கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அச்சுறுத்தி அவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுள்ளனர்.
பணத்தை வழங்கிய மீன் வியாபாரி, தனது பகுதி கிராம அலுவலகர் ஊடாக நல்லூர் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் முதல் கட்டமாக, இல்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை மீன் வியாபாரி அடையாளம் காட்டியுள்ளார்.