Header Ads

Breaking News
recent

சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை நடத்தி வந்த ஆறு பெண்கள் உட்பட 14 பேர் கைது.



மொரட்டுவ - மொரட்டுமுல்ல பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை மொரட்டுமுல்ல காவல்துறையினர் நேற்று (20) கைது செய்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் சூதாட்ட நிலையத்தை நடத்தி வந்த ஆறு பெண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 150,000 ரூபா பணமும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு தொகை அட்டைகள் மற்றும் பல கையடக்க தொலைபேசிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (21) மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.