Header Ads

Breaking News
recent

கொழும்பு, கோட்டை பகுதியில் பதற்ற நிலை!



கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.