Header Ads

Breaking News
recent

இவ்வருட ஜனவரி முதல் இன்று வரை போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 17,026 பேர் கைது...



இவ்வருட ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 17,026 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 408 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேபோல், 298 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 2,166 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு 13 பேர் வௌிநாடுகளில் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நபர்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 24 நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
Powered by Blogger.