Header Ads

Breaking News
recent

இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,169 ஆக உயர்வு...



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 749 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,169 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 237,582 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 2,134 பேர் குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை, 199,393 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 35,689 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Powered by Blogger.