பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதியரை நீடிக்குமாறு சுகாதாரத்துறை அரசிடம் பரிந்துரை...

தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அதனை ஜூலை 2ஆம் திகதியரை நீடிக்குமாறு சுகாதாரத்துறையின் உயர்மட்ட நிபுனர்கள் அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.
அவர்களின் இந்தப் பரிந்துரையை அரசும் தீவிர பரிசீவனையில் எடுத்திருக்கிறது.
முன்னதாக நாளை காலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்படுமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.
ஆனால், மருத்துவத்துறை நிபுணர்களின் கடும் ஆட்சேபனைகளையடுத்து அந்த அறிவிப்பை வாயஸ் பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் ஜூனின் இறுதி வாரத்தில் பொசோன் நிகழ்வும் வரவிருப்பதால் மக்களின் நடமாட்டம் அதிகரிக்கும் என்று கருதும் மருத்துவத்துறை நிபுணர்கள்பயணக்கட்டுப்பாட்டை ஜூலை 2 ஆம் திகதி வரை நீடிப்பதே நல்லதென் அரசிடம் பரிந்துவரத்துள்ளனர்.
எவ்வாறாயினும். இந்த பரிந்துரையை கவனத்திற்கொண்டுள்ள அரசு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் இதர விளையுகள் குறித்து சிந்தித்து மிகுந்த கட்டுப்பாடுகளுடன் பயணத்தடையை தளர்த்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இம்மாதம் 21 ஆம் நிகதியுடன் பயணத்தடையை நீக்கவேண்டுமென்பதே அரசு மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளின் நிலைப்பாடாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.