இலங்கையில் இன்று இதுவரையில் 2,845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

இலங்கையில் மேலும் 856 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 2,845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 189,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 153, 371 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,484பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.