Header Ads

Breaking News
recent

திருகோணமலை மாவட்டத்தில் 87 வது கொவிட் மரணம் பதிவு...


இதுவரை மாவட்டத்தில் 3425 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதிலும் நடந்து முடிந்த மே மாதத்தில் மாத்திரம் 11984 தொற்றாளர்கள் பதிவு .

(31) காலை 10 மணி தொடக்கம் (01) காலை 10 மணி வரையான 24 மணித்தியாலங்களில் பதிவாகிய திருகோணமலையின் Covid 19 நிலவரம் பற்றிய தகவல்களை திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் வெளியிடப்பட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில் உப்புவெளி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 மரணங்களும் கிண்ணியா சுகாதார மருத்துவ அதிகாரி பபிரிவில் பதிவாகிய ஒரு உயிரிழப்போடு மாவட்டத்தின் மொத்த covid மரண எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது . 

அதேவேளை 62 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டிருக்கிறார்கள் . அதிகபடியாக தி கிண்ணியா, குறிஞ்சாக்கேணி ,குச்சவெளி மருத்துவ சுகாதார அதிகாரி பிரிவில் தலா 16 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டிருக்கிறார்கள் .


வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள் 

அநாவசியமாக வெளியே செல்ல வேண்டாம் . 

மனித உயிர் மிக பெறுமதியானது .

Powered by Blogger.