Header Ads

Breaking News
recent

புத்தளம் புதுக்குடியிருப்பு 617 f கிராம சேவகர் பிரிவின் jp lane 9ம்10ம் குறுக்குத்தெருக்கள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன..!


அப்பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் தொடர்ச்சியாக இனங்காணப்பட்டதையடுத்து புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பொலிசாரினால் இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன..!

J.P laneல் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 21பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் புத்தளம் நகரப்பகுதியையும் சேர்த்து இன்று மொத்தமாக 40 பேர்வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்...!

களத்தில் 5ம்6ம் வட்டார நகர சபை உறுப்பினர்கள் திரு பர்வின் ராஜா மற்றும் ரனீஸ் பதியுதீன்ஆகியோர் புத்தளம் பொலிசார் சுகாதார வைத்திய அதிகாரிகள் சகிதம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்..!

எனவே அப்பகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களும் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏனைய மக்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்..!

பரிசோதனை இல்லாமல் மறைமுகமான அதிக தொற்றாளர்கள் சமூகத்தில் காணப்படலாம்.. எல்லா இடங்களிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாகப் பேணி அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உயிராபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும்

பொலிசார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து நகர சபை உறுப்பினர்கள் பர்வின் ராஜா,ரனீஸ் பதூர்தின் ஆகியோர் வேண்டிக் கொள்கின்றனர்..!

Powered by Blogger.