Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தலில் இருந்த மூன்று கிராமங்கள் இன்று முதல் விடுவிப்பு!!!



மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கடந்த (18) ஆந் திகதி முதல் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மாணத்திற்கு அமைவாக முழுமையாக முடக்கபட்டிருந்த நிலையில் இன்று (01) ஆந் திகதி காலை முதல் அதில் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் நேற்று  (31) திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

அதேவேளை இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து வந்த பாலமீன்மடு, கல்லடி வேலூர், திருச்செந்தூர் ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் நொச்சிமுனை, சின்ன ஊறணி ஆகிய இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குக்கும் எனவும் தெரிவித்தார்.
Powered by Blogger.