Header Ads

Breaking News
recent

இன்றும் நாளையும் விசேட சோதனை நடவடிக்கை – உஷார் நிலையில் பொலிஸ் அதிகாரிகள்



தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை அடையாளம் காணுவதற்காக இன்றும் நாளையும் விசேட கண்காணிப்ப நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை அடையாளம் காணுவதற்காக வார இறுதி தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய இன்றும் நாளையும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் விருந்துபசாரங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் ஒன்றுக் கூடல்களில் ஈடுபடக்கூடாது.

அவ்வாறு எவறேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிககை எடுக்கப்படும் என்றார்.
Powered by Blogger.