Header Ads

Breaking News
recent

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஜே.வி.பி. போராட்டம்!



அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் ஓர் அங்கமாக கினிகத்தேனை நகரில் இன்று (22.06.2021) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் ஜே.வி.பியின் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
Powered by Blogger.