Header Ads

Breaking News
recent

துமிந்த விடுதலைக்கு அமெரிக்கா அதிருப்தி..!



கொலைக்குற்றத்திற்கு உள்ளாகி மரணதண்டனை பெற்றுவந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார், ட்விட்டரில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

‘தமிழ் கைதிகளின் ஆரம்ப விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்புக்கெதிராக, இப்போது துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

அரசாங்கத்தின் பொறுப்புணர்வு மற்றும் நீதிக்கான சம அணுகல் ஆகியவை ஐ.நா. கோட்பாடுகளுக்கு அடிப்படையானவையாகும்’ என்றும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.