இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீ

இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்து சமுத்திரத்தில் இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லைப்பகுதியில் மலாக்கா நீரினைப் பகுதியிலேயே குறித்த கப்பல் தற்போது தரித்து நிற்பதாக கூறப்படுகின்றது.