Header Ads

Breaking News
recent

பிறந்த நாள் காணும் ஒரு தந்தை என்ற மகிழ்வுடன், ஒரு குடிமகனாக, நாட்டின் தந்தையருக்கு எனது வாழ்த்துக்கள்!



தந்தையர் தினமானது, இந்த ஆண்டு, எனது பிறந்த நாளில் வந்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு.

ஆனால், அதுவே, எனது பொறுப்பை இன்னொரு அர்த்தத்தில் எனக்கு அழுத்தி உணர்த்தும் ஒரு நாளாகவும் அமைந்திருக்கின்றது.

இந்த நாட்டின் ஜனாதிபதியாக எனது பொறுப்பானது - இலங்கைத் திருநாட்டின் ஒவ்வொரு குடிமகளையும், ஒவ்வொரு குடிமகனையும், எனது பிள்ளையாகக் கருத்திற் கொண்டு - ஒரு தந்தையின் நிலையிலிருந்து, எனது கடமைகளை நான் நிறைவேற்ற வேண்டும் என்பதனையே இன்றைய நாள் எனக்கு மீளவும் உணர்த்தி நிற்கின்றது.

உரிமையோடு எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்க விரும்புகின்றேன்.

இன்றைய நாளில், உங்கள் உளமார்ந்த வாழ்த்துகளின் ஊடாக - எனது மக்களாகிய, உங்கள் அனைவருக்குமான எனது பணியைத் தொடர்வதில் என்னை மென்மேலும் திடப்படுத்தும் வார்த்தைகளாலேயே நான் ஆசீர்வதிக்கப்படுகின்றேன்.

என் மீதும், எனது அரசாங்கத்தின் மீதும், சுபீட்சத்தை நோக்கி நாம் முன்னெடுத்துச்செல்லும் நடவடிக்கைகளின் மீதும் - நீங்கள் கொண்டுள்ள அசையாத நம்பிக்கையையே உங்கள் வாழ்த்துக்கள் ஊடாக நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள் என்பதையும் நான் அறிவேன்.

இன்றைய இந்த நாளில் - குடும்பத்தின் பொறுப்புக்களைத் தாங்கி, நாளை சமூகத்தின் பொறுப்புக்களைத் தாங்கி நிற்கப் போகும் நற் குடிமக்களாக - தமது பிள்ளைகளை வளர்த்து வனைத்தெடுக்கின்ற, எமது நாட்டின் ஒவ்வொரு தந்தையின் கைகளையும் நான் மரியாதையுடனும் தாழ்மையுடனுப் பற்றிக்கொள்கின்றேன்!
Powered by Blogger.