Header Ads

Breaking News
recent

தோட்டத் தொழிலாளர்களுக்கு மதுபானம் விற்றவர் கைது



ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு, அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில், நபர் ஒருவர், இன்று (22) மதுவரி திணைக்கள ஹட்டன அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஹட்டன் – குடா ஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர், தனது வீட்டில் மதுவரி திணைக்கள அனுமதியில்லாது மதுபான போத்தல்கைளை கையிருப்பில் வைத்துகொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக விலையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்து வந்துள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் இருந்து 18 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கும் முகமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுளளதாகவும், ஜுலை 7ஆம் திகதியன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சந்தேகநபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.
Powered by Blogger.