Header Ads

Breaking News
recent

GSP+ வரிச்சலுகை இரத்தாகும் ஆபத்து! இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை



ளஸ் (GSP+) வரிச்சலுகையை தற்காலிகமாகவேனும் இரத்து செய்வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதை வலியுறுத்தி, தீர்மானம் ஒன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் வழங்கப்பட்ட அதேநேரம் 40 பேர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர்.

பயங்கரவாத தடை சட்டமானது சர்வதேச ஒழுங்கு விதிகளுக்கு அப்பாற்பட்டதாகவும் காவல்துறையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கி அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை துன்புறுத்தவும், துஸ்பிரயோகிக்கவும், பலவந்தப்படுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்வதற்கும் வழிவகை செய்வதாக அமைந்துள்ளது.

இந்த சட்டத்தை நீக்குவதற்கான நிபந்தனை அடிப்படையிலேயே, 2017ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பி. ப்ளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக தீவிரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை முன்வைக்குமாறு இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜீ. எஸ். பி. ப்ளஸ் என்பது ஐரோப்பிய நாடுகளில் வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்து அவற்றை விற்பனை செய்ய முடியும். இலங்கையில் ஆடை ஏற்றுமதியே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது
Powered by Blogger.