Header Ads

Breaking News
recent

திருகோணம​லையில் நாளை 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்...



திருகோணமலை மாவட்டத்தில் நாளை (15) காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரையான 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரதான நீர் குழாயின் அவசர திருத்த வேலை காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜெயந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை – கண்டி பிரதான வீதி, முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள பிரதான குழாய் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மூலமான நீர்க் கசிவு ஏற்பட்டதை அடுத்து திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் துண்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, திருகோணமலை நகர், கிண்ணியா, தம்பலகாமம், நிலாவெளி, ஆண்டாங்குளம், பாலைஊற்று மற்றும் சீனக்குடா ஆகிய பகுதிகளில் நீர் துண்டிக்கப்படும் எனவும் இதனால் நீரை சேமித்து வைக்குமாறும் பிராந்திய முகாமையாளர், பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
Powered by Blogger.