Header Ads

Breaking News
recent

பலாப்பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரணம்...



பலாப்பழம் ஒன்றை பறிப்பதற்காக முயற்சித்த 14 வயது சிறுவன் அருகில் இருந்த கால்வாயில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.

ஹுங்கம தெனிய பிரதேசத்தில் நேற்று (13) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் கதிரை ஒன்றில் ஏறி கம்பு ஒன்றை கொண்டு பலாப்பழத்தினை பறிக்க முயற்சித்த போது சிறுவன் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட தனது தாயுடன் அவரின் பாட்டியின் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நோனாகம பலுகஸ்வல பிரதேசத்தை சேர்ந்த நிமேஷ் லக்சித என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.