Header Ads

Breaking News
recent

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது...



தடைசெய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் மாலை மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் மற்றும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.ஞானதுசாரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான குறித்த இருவரும் விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஞானதுசார மேலும் தெரிவித்தார்
Powered by Blogger.