Header Ads

Breaking News
recent

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் 43 வதுடைய ஆண் ஒருவர் கைது


மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய ஆண் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று சனிக்கிழமை (03) உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியின் தந்தையார் அவர்களை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்துவருதவதுடன் தாயார் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரு திருமணங்கள் முடித்துள்ளதுடன் 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்தது தெரியவந்துள்ளது

இதனையடுத்து சிறுமியின் பெரியதாயார் காவற்துறையினருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து காவற்துறையினர் வெள்ளிக்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளர்.


இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை (03) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Powered by Blogger.