Header Ads

Breaking News
recent

முகநூலில் ஆணுக்கு காதல்வலை விரித்து பணம் பறித்த 40 வயது பெண் கைது


முகநூல் ஊடாக ஆணொருவரை ஏமாற்றி பணம் பறித்துவந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ள பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு யுவதிகளின் அழகிய புகைப்படத்தை பயன்படுத்தி, முகநூல் கணக்கு ஆரம்பித்து, தனது தொழில் ஆசிரியர் எனவும், வயது 30 எனவுமே முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவருடன் தொடர்பைபேணிய 32 வயது இளைஞரொருவர் சுமார் 9 லட்சம்வரை வங்கிக் கணக்கில் பல தடவைகள் வைப்பிலிட்டுள்ளார். பின்னர் தொடர்பு இல்லாமல்போயுள்ளது. குறித்த இளைஞனால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே கைது இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Powered by Blogger.