Header Ads

Breaking News
recent

A/L பரீட்சைகள் ஒக்டோபரில் நடைபெறுமா? – கல்வி அமைச்சர் பதில்


கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை பிற்போடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடாத்தி தீர்மானமொன்றுக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே கல்வியமைச்சர் இதனைக் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதையை கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற் கொண்டு, மாணவர்களுக்கு பாதகமான நிலை ஏற்படாத வகையில் தீர்மானமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
Powered by Blogger.