Header Ads

Breaking News
recent

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள்!


மூதூர் கட்டைபறிச்சான் பாலம் நிர்மாணிக்கப்பட்டு 45 வருடங்களாகின்றன. தற்பொழுது பாலம் சேதமடைந்து காணப்படுவதால் அப்பாலத்தினை புதிதாக அமைப்பதற்கு மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அரூஸ் வேண்டுகோளுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக் இனால் பாரிய முயற்சி செய்யப்படுகின்றது.

அதன் முதற்கட்டமாக அப்பாலத்தினை வடிவமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஜனாப் ஜப்பார் நேற்று (03) குறிப்பிட்ட இடத்திற்கு விஜயம் செய்து தேவையான அளவீடு செய்து வடிவமைப்பைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்பொழுது 3.5 மீற்றர் அகலமாக உள்ள பாலம் புதிதாக 7 மீற்றர் அகலமான பாலமாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ் விஜயத்தின்போது மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜெயமாலா மற்றும் பிரதேச பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.