Header Ads

Breaking News
recent

அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...



நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்றடையவுள்ளது.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக 11 நாட்களாகவும் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.