Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது


திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொத்த மீன் விற்பனை நிலையத்திற்கு எதிரே உள்ள வீதியில் இன்று (25) 1 1/2 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தலைமையப் பொலிஸார் தெரிவித்தனர்.

சீனன் குடா விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சர்தாபுர விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மேற்படி கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கஞ்சாவை கடத்திய ஒருவரும் கைது செய்யப்பட்டு தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து ஸ்கூட்டி வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட கஞ்சா பிடிப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கஞ்சாவின் பெறுமதி 48,000 ரூபா எனவும் திருகோணமலை சுமேத்திரகம பிரதேசவாசியான 53 வயதுடையவர் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Powered by Blogger.