Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை பலி, கணவன், பிள்ளை வைத்தியசாயில் அனுமதி...


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை பலி, கணவன், பிள்ளை ஆகியோர் வைத்தியசாலையில்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் (25) ஞாயிறு இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளதுடன் அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7வயதான குழந்தை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வருகின்றபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின்மீது மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருமதி. பாமதி ஞானவேல் (49) (T/T/St Lady of Loudes R.C.V Paalaiyoothu)
என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





Powered by Blogger.