ஒன்பது மணிநேரம் நீடித்தது டயகம சிறுமியின் பிரதே பரிசோதனை

டயகம சிறுமியின் இரண்டாவது பிரதேப்பரிசோதனை இன்று முடிவடைந்துள்ளது பிரதே பரிசோதனை ஒன்பது மணித்தியாலங்கள் நீடித்தது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
மூன்று மருத்துவ நிபுணர்கள் மணித்தியாலம் பிரதே பரிசோதனையை மேற்கொண்டனர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சில காயங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்று சிடி ஸ்கான் மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்கள் புதிய அறிக்கையை தயாரிப்பதற்காக உடலின் பல பாகங்களின் மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அனைத்து ஆய்வு அறிக்கைகள் கிடைதததும் மருத்துவகுழுவினர் தங்கள் முடிவை வெளியிடுவார்கள் அதுவரை உடல் பேராதனை மருத்துவமனையிலேயே இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.