என்.சி. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

பாடசாலை மாணவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ சாரதிகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக என்.சி. போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் நீண்ட காலமாக போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகிசிய தகவலினையடுத்து நோர்வூட் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி பிரேமலாலின் வழிகாட்டலில் குறித்த சுற்றிவளைப்பு நேற்று (22) பகல் இடம்பெற்றுள்ளது.
