Header Ads

Breaking News
recent

இறக்கமாம் பொலிஸ் நிலையம் உத்தியோக பூர்வமாக சென்ற 19ம் திகதியன்று திறந்துவைப்பு...!


அம்பாறை மாவட்டத்திற்கு 3 உப பொலிஸ் நிலையங்கள் புதிய பொலிஸ் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
  • இறக்காமம்
  • நிந்தவூர்
  • பண்டாரதுர
ஆகிய  பிரதேசங்களில்  புதிதாக  3    பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் முதலாவது திறப்புவிழாவாக இறக்காமம் பொலிஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் வைபவ ரீதியான திறப்பு விழாக்கு பொலிஸ் திணைக்கள சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், அம்பாரை மாவட்ட பொலிஸ் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் உற்பட தமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தமன பிரதேச சபை தவிசாளர், இறக்காமம் மத்தியஸ்த சபை தலைவர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

புதிதாக பொலிஸ் நிலையங்கள் திறப்பதற்கு பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியதையடுத்து அம்பாறை மாவட்டத்தில் தமண பொலிஸ் பிரிவிலுள்ள இறக்காமம் பிரதேசத்தில் இறக்காமம் பொலிஸ் நிலையமும்,

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள நிந்தவூர் பிரதேசத்தில் நிந்தவூர் பொலிஸ் நிலையமும்,

பண்டாரதுர பிரதேசத்தில் பண்டாரதுர பொலிஸ் நிலையமும், ஆகிய 3 புதிய பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.