Header Ads

Breaking News
recent

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.....!!!

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி S.N.M சாலிய பண்டார நவரத்ன அவர்களின் தலைமையில் 01.07.2021 அன்று அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று நீதிமன்ற நிருவாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் எரிவாயு (Gas) அதிக விலைக்கு விற்றமை தொடர்பாக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கடந்த யூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாவனையாளர் பாதுகாப்பு சட்டத்தினை மீறிய 30 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன இதில் யூரியா உரத்தினை கூடுதல் விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை என்பனவும் உள்ளடங்கும்.

Powered by Blogger.