Header Ads

Breaking News
recent

அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வேலைத்திட்டம் ஆரம்பம்...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பிரத்தியேக ஒழுங்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாத திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது

நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்ட இக்காலப்பகுதியில் திருகோணமலை நகரம் வெறிச்சோடிக்காணப்படுவதுடன் அத்தியவசிய சேவைகள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டவர்கள் மாத்திரம் பாதைகளில் பயணிப்பதுடன் நகரின் சந்திகளிடையே பாதுகாப்பு கடமைகளில் பாதுகாப்பத்தரப்பினர் மற்றும் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பயணத்தடை விதிக்கப்பட்ட இக்காலப்பகுதியில் மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்களுக்கு அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பிரத்தியேக ஒழுங்குகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுத்தலுக்கமைய பிரதேச செயலாளர்களளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மக்கள் கொவிட் பரவல் ஏற்றப்படா வண்ணம் பொறுப்புடன் செயற்படுவதுடன் சுகாதார அறிவுறுத்தல்களை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள பொது மக்களிடம் வேண்டிக்கொள்கின்றார்.





Powered by Blogger.