Header Ads

Breaking News
recent

கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்ய அம்பாறையில் புதிய இடம்...



கொவிட்-19 சரீரங்களை அடக்கம் செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடத்தில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான சரீரங்களை அடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட செயலாளரினால், குறித்த இடம், சரீரங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமானதென அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அது குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதிகளில், மேலும் 500 சரீரங்கள் அளவில் அடக்கம் செய்யக்கூடிய நிலைமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொவிட்-19 சரீரங்களை அடக்கம் செய்வதற்காக இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.
Powered by Blogger.