Header Ads

Breaking News
recent

அபுதாபி: 2 மணிநேரத்தில் PCR பரிசோதனை எடுக்கவேண்டுமா? – இதை முயற்சியுங்கள்..!


அபுதாபியில் வழக்கமாக PCR பரிசோதனை எடுக்கவேண்டுமானால் 65 திர்ஹம்ஸ் செலவாகும். பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் உங்களுக்கு அளிக்கப்படும். அவசர சூழ்நிலை கருதி, உடனடியாக PCR பரிசோதனை எடுக்க விரும்புவர்களுக்கு உதவும் வகையில் எக்ஸ்பிரஸ் PCR பரிசோதனை வசதியை அபுதாபி சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, 2 மணிநேரத்தில் PCR பரிசோதனை முடிவுகளைப் பெற 350 திர்ஹம்ஸ் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 5 மணிநேரத்தில் PCR பரிசோதனை முடிவுகளைப் பெற 250 திர்ஹம்ஸ் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சமூக மக்களின் தேவையை அறிந்து, அவர்கள் விரும்பிய நேரத்தில் பரிசோதனை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் அரும்பாடுபடும் சுகாதார ஊழியர்களை ஆதரிக்கவும் இத்திட்டம் உதவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடியே கொரோனா PCR பரிசோதனை எடுத்துகொள்ள விரும்பும் நபர்கள் சுகாதாரத் துறையை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு Healthsystemfinancing@doh.gov.ae என்ற இணையதள முகவரியை நாடுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Powered by Blogger.