Header Ads

Breaking News
recent

புதுக்குடியிருப்பு கோட்டத்தில் பாடசாலைகளில் கற்றல் வகுப்புக்கள் நடத்த முற்றாக தடை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களை அழைத்து கற்றல் வகுப்புக்களை நடத்த சுகாதார வைத்திய அதிகாரி முற்றாக தடைசெய்துள்ளார்.

புதுக்குடியிருப்பு கோட்டத்தில் சில பாடசாலைகளில் மாணவர்களை அழைத்து கற்றல் வகுப்புக்கள் நடத்தப்படுவதாக பெற்றோர்களால் சுகாதார வைத்திய அதிகாரிபணிமனைக்கு முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொவிட் 19 தொற்று அதிகரித்து காணப்படுவதால் பாடசாலைகளில் கற்றல் வகுப்புக்களை நடத்துவது கொவிட் 19 தொற்றை அதிகப்படுத்தலாம். எனவே வகுப்புக்களை உடன் நிறுத்தி வைக்குமாறும் இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறும் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரிக்கு சுகாதார வைத்திய அதிகாரி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
Powered by Blogger.